உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஸ்டாலின் கவனம் எங்கே இருக்கு? தமிழகத்தின் பரிதாப நிலைக்கு சாட்சி

ஸ்டாலின் கவனம் எங்கே இருக்கு? தமிழகத்தின் பரிதாப நிலைக்கு சாட்சி

சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 100க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்தன. குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீருக்காக 2 கி.மீ நடந்து சென்று ஊற்று தோண்டி நீரை எடுக்கும் அவலநிலை நிலவுகிறது. ஊரில் ஆட்கள் குறைய குறைய குற்றச்சம்பவங்களும் நடந்தன. 9 மாத இடைவெளியில் அதிமுக நிர்வாகி கணேசன், விவசாயி சோணைமுத்து ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். பயந்து போன மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறினர். எஞ்சியிருந்தது 4 முதியவர்கள் மட்டுமே. அவர்களில் 3 பேரை குடும்பத்தினர் நேற்று கூட்டிசசென்று விட, தங்கராஜ் என்ற முதியவர் மட்டும் கிராமத்தில் வசிக்கிறார்.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை