உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஆம்பூர் நெடுஞ்சாலை அருகே நடந்த விபத்தால் அதிர்ச்சி | Auto accident | School students | Auto upset

ஆம்பூர் நெடுஞ்சாலை அருகே நடந்த விபத்தால் அதிர்ச்சி | Auto accident | School students | Auto upset

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் குமரன். இவர் தனது ஆட்டோவில் தினமும் ஸ்கூல் சவாரி ஓட்டுகிறார். வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு விண்ணமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நின்றிருந்த ஒருவர் திடீரென டூவீலரை திருப்பினார். அவர் மீது மோதமால் இருக்க குமரன் வந்த வேகத்தில் ஆட்டோவை வளைத்தபடி பிரேக் பிடித்தபோது ஆட்டோ சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. (பிரத்) அங்கு நின்றிருந்த மக்கள் பள்ளி குழந்தைகள் ஆட்டோ கவிழ்ந்ததை பார்த்து பதறி அடித்து ஓடிவந்து ஆட்டோவை திருப்பி அவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகளும், டிரைவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். ஆட்டோ கவிழ்ந்த சில வினாடியில் அதிக அளவு புகை வெளியேறியதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை