உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கோலம் போட்ட பெண் மீது கார் மோதியதால் சோகம் | Car accident | Car moved on woman | Kanchipuram | Woman

கோலம் போட்ட பெண் மீது கார் மோதியதால் சோகம் | Car accident | Car moved on woman | Kanchipuram | Woman

காஞ்சிபுரம் கங்கை அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் ராசா, வயது 45 முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து ஈகோ காரில் வைத்து கடைகளில் விற்பனை செய்கிறார். இன்று அதிகாலை தனது 17 வயது மகன் ரூபனுடன் வீட்டின் எதிர்புறமாக நின்று கொண்டிருந்த காரை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். காரை ஆன் செய்து சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக நகர்ந்துள்ளது. அவரது வீட்டின் அருகே வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த வீட்டு வேலை செய்யும் 55 வயது சரஸ்வதி என்பவர் மீது மோதி அடுத்தடுத்து நின்றிருந்த டூவீலர்களையும் மோதி நின்றது. சரஸ்வதி காருக்கு அடியில் சிக்கியதை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். பின்னர் காரை நகற்றி சரஸ்வதியை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசாவுக்கு கார் ஓட்ட தெரியாததால் டிரைவர் வைத்தே கடைகளுக்கு சென்று வந்துள்ளார். காலை காரை சுத்தம் செய்தபோது டிரைவர் இல்லாமல் ராசாவும், அவரது மகனும் காரை ஸ்டார்ட் செய்து, பாட்டு கேட்டுக்கொண்டே சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் ராசாவிடம் விசாரிக்கின்றனர்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ