சமூக சேவகர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல் | Case against DMK Member | Nellai Viral Video
நெல்லை மாவட்டம் ஆழ்வார் திருநகநேரியை சேர்ந்தவர் அருள் சாலமன், சமூக ஆர்வலர். அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் எட்வர்ட்டின் அண்ணன் வீட்டு வாசலில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாவதை வீடியோ எடுத்து கடந்த மாதம் சமூக வலைதலத்தில் பதிவிட்டார். பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய குடிநீர் இப்படி வீணடிக்கப்படுகிறது என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த எட்வர்ட், பாளையங்கோட்டையில் வைத்து அருள் சாலமனை தாக்கினார். தன்னை தாக்கிய எட்வர்ட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மாதம் அருள் சாலமன் பாளையங்கோட்டை பாேலீசில் புகார் அளித்தார். எட்வர்ட் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால், போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு சாலமனை அனுப்பி வைத்தனர். புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் எட்வர்ட் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலதாமதம் செய்தனர். இதற்கிடையே, புகார் அளித்ததற்காக சாலமனை, எட்வர்ட் மீண்டும் தாக்கினார். அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோ எடுத்தார். சாலமன் தன்னிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியை சமூக வலைதலத்தில் எட்வர்ட் பதிவிட்டார். இந்த வீடியோ பாளையங்கோட்டை முழுதும் காட்டுத் தீயாய் பரவியது.