உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கழிவுநீர் கலந்து தேங்கியதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு Chennai rain | Flood | chennai flood

கழிவுநீர் கலந்து தேங்கியதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு Chennai rain | Flood | chennai flood

சென்னையில் 2 தினங்களாக கனமழை பெய்த நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் மழை இல்லை. சென்னையில் பல இடங்களில் வெள்ளம் மெதுவாக வடிய தொடங்கி உள்ளது. பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி, முல்லைநகர், எம்ஜிஆர் நகர், இந்திரா நகர், எம்கேபி நகர், நார்த் அவென்யூ சாலை உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. வாகனங்கள் நீரில் மூழ்கியபடி உள்ளன. சுமார் 4 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீரும் கலந்து 2 நாட்களாக தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை