ஓட்டலில் ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத்துறை! Biriyani Hotel | Chennai | Public Aff
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு, நிஷா என்பவர் பொறித்த சிக்கன் வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு கொண்டு சென்று குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை வீட்டில் இருந்த அனைவருக்கும் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று பின்னர் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். 10 வயது, 12 வயது சிறுவன் உட்பட 7 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதே போல அதே பகுதியை சேர்ந்த ராஜூ குடும்பத்தினரும் அந்த கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் உடல் உபாதை ஏற்பட்டு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உணவகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.