திண்டுக்கல் கோர விபத்தின் பகீர் பின்னணி | Dindigul Hospital | Dindigul Fire | Dindigul Hospital Fire
திண்டுக்கல் திருச்சி ரோட்டில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் சிட்டி ஆஸ்பிடல் இயங்கி வருகிறது. தரைதளத்துடன் சேர்த்து மொத்தம் 4 தளங்கள் உள்ள இந்த ஆஸ்பிடலில் 3 தளங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 4வது தளத்தில் நர்ஸ்கள் தங்கும் அறைகள் உள்ளது. வியாழக்கிழமை இரவு ஆஸ்பிடல் தரைத்தளத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. நுழைவு பகுதி முழுக்க தீ பரவி, புகை மூட்டம் சூழ்ந்துகொண்டதால் நோயாளிகள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீ விபத்து நடந்த போது நோயாளிகளின் உறவினர்களோடு சேர்த்து ஆஸ்பிடலுக்குள் 60 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த 15 நிமிடங்களுக்குள் தீயணைப்பு துறையினர் ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டனர். அவர்களுடன் திண்டுக்கலில் முகாமிட்டிருந்த பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முன்பக்க கதவு முழுக்க தீ பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மீட்பு குழுவினர் உள்ளே சென்றனர். நோயாளிகள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் வேறு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து நடந்தது எலும்பு முறிவு ஆஸ்பிடல் என்பதால் நோயாளிகள் பலர் எழுந்துவர முடியாமல் சிரமப்பட்டனர். அவர்களை மீட்டு வெளியே அழைத்து வருவது மீட்பு படையினருக்கு சவாலாக இருந்தது.