உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / டாக்டர் மகன் செய்த செயலால் கம்பி எண்ணும் தாய் | doctor arrested | trichy sexual harrassment

டாக்டர் மகன் செய்த செயலால் கம்பி எண்ணும் தாய் | doctor arrested | trichy sexual harrassment

திருச்சி மேலப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அங்குள்ள விடுதியில் சில மாணவிகள் தங்கி படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி பணிபுரிந்தார். இவரது மகன் சாம்சன் லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். லால்குடியில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது, தாயுடன் மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்வாராம். சிலருக்கு காய்ச்சல், சளி, தலைவலி இருமல் என உடல்நல பிரச்னை இருப்பதை பார்த்தால் தானாக சாம்சனே அக்கறையுடன் மருத்துவம் பார்த்துள்ளார். இதனால் அடுத்த முறை வரும்போது மற்ற மாணவிகளும் அவரிடம் தங்கள் பிரச்னைகளை கூறியுள்ளனர். சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் சில மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !