உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போலீஸ் வேண்டாம்! CBI வரட்டும்: கொல்கத்தா ஐகோர்ட் | PGT Doctor | Kolkata Medical College

போலீஸ் வேண்டாம்! CBI வரட்டும்: கொல்கத்தா ஐகோர்ட் | PGT Doctor | Kolkata Medical College

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை மருத்துவம் பயின்ற 31 வயதான பெண் மருத்துவர் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனை அரங்கில் தூங்கிய அவர் அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 33 வயதான சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சைகோ தானமாக பெண் மருத்துவரை கொலை செய்திருப்பது விசாரணையில் உறுதியானது. கொலை வழக்கில் மேற்கு வங்க போலீஸாரின் நடவடிக்கை திருப்தி இல்லை என மாணவியின் பெற்றோர் கூறினர்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை