ஜாபர் சாதிக் செய்த தில்லாலங்கடி? ஆதாரத்துடன் தூக்கியது ED | Jaffer Sadiq case | ED | Director Ameer
1,800 கோடி ரூபாய் போதை பொருள் கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய்க்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததால் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. ஏற்கனவே சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சாதிக்குக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அமீனா பானு, தம்பி முகமது சலீம் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது அமீனா, சலீம் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. ஜாமின் கிடைக்காத பட்சத்தில் அவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.