விபத்தில் சிக்கியதாக நாடகம் ஆடிய குடும்பத்தினர் | Jolarpettai | Family issue | Tirup
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், வயது 59. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ரவிக்குமார், மனைவி மணிமேகலையுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று இரவும் மனைவியுடன் தகராறு செய்தவர், அடித்து துன்புறுத்தி உள்ளார். வலி தாங்க முடியாத மணிமேகலை, 37 வயது மகன் சாரங்கபாண்டிக்கு செல்போன் மூலம் தகவல் சொன்னார். குடிபோதையில் இருந்த அவரும், உடனடியாக வீட்டுக்கு வந்தார். தந்தையிடம் தட்டிக்கேட்டார். மோதல் முற்றியது. ஆத்திரம் அடைந்த சாரங்கபாரண்டி அருகில் இருந்த கட்டையை எடுத்து, தந்தை ரவிக்குமாரின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற தாயும் மகனும், ரவிக்குமார் பைக்கில் இருந்து விழுந்துவிட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பிடலுக்கு ரவிக்குமாரை அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த தர்மபுரி டாக்டர்கள், உயிரை காப்பாற்ற முடியாது என கூறிவிட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் ரவிக்குமாரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.