உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / விடுதிக்கு சென்ற மாணவி: அப்புறம் நடந்தது என்ன? Girl student bhuvaneshwari dies governmenet girls hi

விடுதிக்கு சென்ற மாணவி: அப்புறம் நடந்தது என்ன? Girl student bhuvaneshwari dies governmenet girls hi

திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி வயது 17. உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தை ஒட்டி உள்ள அரசின் சமூக நீதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். மதியம் உணவு சாப்பிடுவதற்காக விடுதிக்கு சென்றார். சாப்பிட்டு விட்டு மறுபடியும் பள்ளிக்கு சென்றார். வகுப்பறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அதைப் பார்த்து சக மாணவிகள் அலறினர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரழைவழைக்கப்பட்டு புவனேஸ்வரியை உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பள்ளி மற்றும் விடுதி மாணவிகளை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ள நிலையில், விடுதி, பள்ளிக்கு சென்று உடுமலை போலீசார் விசாரணை நடத்தினர். விடுதியில் சாப்பிட்டு விட்டு தோழிகளுடன் நடந்துசெல்லும்போது நெஞ்சு எரிச்சல் இருப்பதாக புவனேஸ்வரி கூறியுள்ளார்.. டயர்டாகவும் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். சோர்வுடன் வகுப்பறைக்கு வந்து உட்கார்ந்தபிறகுதான் மயங்கி விழுந்துள்ளார். அதனால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் பிரேத பரசோதனை அறிக்கை வந்தால்தான் காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினர். #GirlStudent #Bhuvaneshwari #Dies #GovernmentGirlsHigherSecondarySchool #Udumalpet #Police #Students #Education #Tragedy #SchoolNews #StudentSafety #TamilNadu #UdumalpetNews #SchoolIncident #YouthAwareness #EducationMatters #CommunitySupport #Justice #SocialAwareness #SchoolCommunity

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை