நீங்க நல்லா வருவீங்க: முதியவரின் வீடியோ வைரல் | Ias Arun Thamburaj madurai | old man complaint
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் மழை பெய்தது. அப்போது, மதுரை வைகை கரையோரம் உள்ள ஆழ்வார்புரம் பகுதியில் மதுரை மாவட்டத்துக்கான சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். ஆய்வை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டபோது, ஒரு முதியவர் காரை நோக்கி வந்தார். அருண் தம்புராஜ் காரை நிறுத்தினார். என்ன ஐயா சொல்லுங்க என பொறுமையுடன் கேட்டார். மதுரையில ஆயுத பூஜைக்கு ஆயிரம் டன் குப்பை சேந்துடுச்சி... பல இடங்கள்ல வாய்க்கால் அடைச்சி கிடக்கு; வந்து பாருங்க என்றார். அப்போது, உள்ளூர் அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக முதியவரிடம் சொல்ல, நீங்க சும்மா கிடங்க... நீங்க பாத்த வேலை எங்களுக்கு தெரியாதா? என ஐஏஎஸ் முன்னிலையிலேயே விளாசி தள்ளினார், முதியவர்.