ஆறு ஊரு வயலை விழுங்கிய கொள்ளிடம் வெள்ளம்-பரபரப்பு காட்சி | kollidam flood drone video | mettur dam
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் 2 நாள் முன்பு உபரி நீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 1.8 லட்சம் கன அடிநீர் திறந்து விட்டனர். இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கொம்பு அணையில் இருந்து வெள்ளம் இரண்டாக பிரிந்தது. அதிகபடியான நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. அங்கு வழியோரம் உள்ள கிராமங்களை தழுவிய படி வெள்ளம் சென்றது. சிதம்பரம் அருகே பல கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக திட்டு கிராமங்களான அக்கறை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, மடத்தான்தோப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. ஊர் பகுதியை சுற்றி இருக்கும் விளை நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. பல நூறு ஏக்கர் வாழை, கத்தரி, முருங்கை வெள்ளத்தில் மூழ்கின. 7 மாடுகளை வெள்ளம் அடித்து சென்றது. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. வழிநெடுக கொள்ளிடம் ஆற்றின் இருபுறமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.