உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரோட்டில் மனித தலை... மதுரையை உலுக்கிய சம்பவம் | Madurai crime news | Madurai Natham road crime case

ரோட்டில் மனித தலை... மதுரையை உலுக்கிய சம்பவம் | Madurai crime news | Madurai Natham road crime case

அறுத்து வீசப்பட்ட மனித தலை மதுரை ரோட்டில் பதைபதைப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? மதுரையில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் வழக்கம் போல் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டு இருந்தன. மதுரை திருப்பாலை வாசுநகர் எதிர்புறம் நத்தம் ரோட்டில் மனி தலை இருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மதுரை தல்லாக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாயுடன் போலீசார் ஸ்பாட்டுக்கு சென்றனர். மனித தலை மண்டும் ரோட்டில் இருந்தது. இறந்தவர் ஒரு ஆண். அவரது தலையை போலீசார் கைப்பற்றினர். ஸ்பாட்டில் இருந்து குடியிருப்பை நோக்கி மோப்ப நாய் ஓடியது. சிறிது தூரம் சென்ற பிறகு நின்று விட்டது. சம்பவ இடம் மற்றும் மோப்ப நாய் சென்ற பகுதிகள் வழியாக போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். பக்கத்தில் நாகனாகண்மாய் இருக்கிறது. அதை சுற்றியும் சோதனை நடந்தது. ஆனால் இறந்தவரின் உடல் கிடைக்கவில்லை. விசாரணைக்கு உதவும் வேறு தடயமும் சிக்கவில்லை. டாக்டர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தலையை சோதனை செய்தனர். அதில் இறந்தவரின் வயது 60 இருக்கலாம் என்றும், கழுத்தை அறுத்து இருப்பதும் தெரியவந்தது. இதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை