உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 35,000 ஏக்கர் நெல் பயிர்களை மூழ்கடித்த தொடர் மழை | Paddy affect | Heavy rain | Farmers request

35,000 ஏக்கர் நெல் பயிர்களை மூழ்கடித்த தொடர் மழை | Paddy affect | Heavy rain | Farmers request

தஞ்சையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மாவட்டம் முழுதும் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா - தாளடி பயிர்கள் கடுமையாக பாதித்தன. ஒரத்தநாடு அருகே புலவன்காடு சுற்றுவட்டார பகுதியில் மட்டும் அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பாடுபட்டு இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் திடீரென கொட்டிய தொடர் கனமழை பயிர்கள் அனைத்தையும் நாசமாக்கியதால் கசப்பான பொங்கல் பண்டிகையாக மாறிவிட்டதாக வேதனை அடைந்துள்ளனர். அரசு உரிய நிவாரணம் கொடுத்தால் மட்டுமே இதில் இருந்து மீண்டு வரமுடியும் எனவும் கூறுகின்றனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ