/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கைதானவர்களிடம் இருந்து ₹33 லட்சம் மதிப்பிலான கோகைன் பறிமுதல்! Rakul preet singh | Aman preet singh
கைதானவர்களிடம் இருந்து ₹33 லட்சம் மதிப்பிலான கோகைன் பறிமுதல்! Rakul preet singh | Aman preet singh
தெலுங்கானாவில் கோகைன் எனப்படும் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஐதராபாத் ராஜேந்திரா நகர் பகுதியில் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். அதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங்கும் ஒருவர். அவர்கள் 5 பேர் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் மதிப்பிலான கோகைன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்க வந்த சிலரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 15, 2024