உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாதி ரோடு காணோம்: பிளந்து ஆற்றுக்குள் உள்வாங்கிய காட்சி | Road Collapse | Viral Video

பாதி ரோடு காணோம்: பிளந்து ஆற்றுக்குள் உள்வாங்கிய காட்சி | Road Collapse | Viral Video

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மா.அரசூர் கிராமம். கொள்ளிடம் ஆற்று கரையை ஒட்டியுள்ள ரோடு வழியாகவே அங்கே போக முடியும். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்குமேற்பட்ட கிராமங்களை இந்த ரோடு இணைக்கிறது. கீழணையில் தொடங்கி வல்லம்படுகை வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்கிறது. சமீபத்தில் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த சுவடுகளே தெரியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளது.

டிச 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu.
டிச 08, 2025 18:37

ரோடு போட்டோமா? எப்போ? நாங்கள் பணத்தை ஸ்வாஹா தானே செய்தோம், ரோடு போட்டதா ஞாபகம்மே இல்லையே.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை