ஆற்காடு சுரேஷுடன் சேர்ந்த பின் சீசிங் ராஜாவின் அசுர வளர்ச்சி |Rowdy Seizingraja,Amstrong Case
சென்னை புளிய்ந்தோப்பைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பிதான் பொன்னை பாலு. அண்ணனை கொன்றவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் உதவிக்கரம் நீட்டினார் என்ற ஆத்திரத்தில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை பொன்னை பாலுவும், கூட்டாளிகளும் கொலை செய்தது தெரிய வந்தது. ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பன் சீசிங் ராஜா. அவனையும் தனிப்படை போலீசார் 2 மாதத்துக்கு மேலாக தேடி வந்தனர். ஆந்திராவில் பதுங்கியிருந்த சீசிங் ராஜாவை இந்த வழக்கில் 29 வது ஆளாக தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இசிஆரில் உள்ள அக்கரை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக சீசிங் ராஜா சொன்னான். ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீசார் இன்று அவனை அக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். போலீசார் திருப்பிச் சுட்டதில் சீசிங் ராஜா பலியானான். அவனுக்கு வயது 49.