/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கட்சி பிரமுகர்கள் செல்வாக்கோடு நடக்கும் மண் கடத்தல் | Sand Mining | Coimbatore
கட்சி பிரமுகர்கள் செல்வாக்கோடு நடக்கும் மண் கடத்தல் | Sand Mining | Coimbatore
கோவை மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் சிறு சிறு குன்றுகள் உள்ளன. குறிப்பாக பெள்ளேபாளையம், அக்கரை செங்கபள்ளி, அன்னூர், குப்பனூர், வடக்கலூரில் அதிகம் உள்ளது. இங்கே ஆத்திகுட்டை பெருமாள் கோயில், இரும்பொறை பகுதியில் உள்ள குன்றுகளில் இருந்து கிராவல் மண் அள்ளப்படுகிறது. கடந்த ஆறு மாதமாக சில மர்ம நபர்கள் சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் இருந்தும் இரவு நேரங்களில் மண் அள்ளப்படுகிறது. தட்டிக்கேட்ட கிராம மக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
செப் 05, 2024