உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பெண் போலீஸ் உட்பட வசமாக சிக்கிய 4 பெண்கள் | Sankaranarayana swamy temple | Sankarankovil | Hundi cou

பெண் போலீஸ் உட்பட வசமாக சிக்கிய 4 பெண்கள் | Sankaranarayana swamy temple | Sankarankovil | Hundi cou

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. காணிக்கை எண்ணும் பணியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தி அமைப்பினர், தன்னார்வலர்கள் பங்கெடுப்பனர். நேற்று உண்டியல் காணிக்கை எண்ண வந்த பெண்களில் சிலர் பணத்தை திருடியதாக அருகில் இருந்த பெண்கள் கோயில் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். அவர்கள் தீவிரமாக கண்காணித்தபோது, தூத்துக்குடி தென்பகுதி காவல் நிலைய கான்ஸ்டபிள் மகேஸ்வரி மற்றும் அவருடன் வந்த 3 பெண்களும் பணத்தை தங்களது ஆடைக்குள் மறைத்து வைப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் 4 பேரையும் அங்கு பணியில் இருந்த போலீசார் கோயில் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் திருக்கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்போரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார், கான்ஸ்டபிள் உட்பட 4 பெண்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர். பக்தர்களின் காணிக்கை பணத்தை எண்ணுவதாக கூறி பெண் போலீசுடன் சேர்ந்து 3 பெண்கள் பணத்தை திருடிய சம்பவம் சங்கரன்கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ