உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மோனலிசாவுக்கு வாய்ப்பு தந்த இயக்குனரின் சபல புத்தி | Sanoj Mishra | Monalisa Bhosle | Maha Kumbh

மோனலிசாவுக்கு வாய்ப்பு தந்த இயக்குனரின் சபல புத்தி | Sanoj Mishra | Monalisa Bhosle | Maha Kumbh

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் பாசி மணி விற்ற மோனலிசா என்ற பெண் பிரபலம் அடைந்தார். சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அவரது வீடியோக்கள் பரவின. பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா அவரது பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். மோனாலிசாவுக்கு தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன் மூலம் சனோஜ் மிஸ்ரா அனைவரின் கவனத்தை பெற்றார். இந்நிலையில் இவர் கதாநாயகியாக ஆசைப்பட்ட ஒரு கிராம பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 28 வயது பெண் டில்லி போலீசில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக டில்லி கோர்ட்டில் சனோஜ் மிஸ்ரா ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். டில்லி கோர்ட் அவரது ஜாமின் மனுவை நிராகரித்தது. இப்போது டில்லி போலீசால் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை