போலீசாரை கண்டித்து உறவினர்கள் மறியல் Shipmen | Chennai
வடசென்னை, காசிமேட்டை சேர்ந்தவர் குமரன். வயது 32. கப்பலில் Seaman ஆக பணியாற்றிவந்தார். 3 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டது. 2 வாரத்தில் திருமணம் நடைபெற இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். குமரன் டிபன் வாங்கவதற்காக, நண்பருடன் ஹோட்டலுக்கு சென்றார். அப்போது காசிமேட்டை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர், குமரன் வந்த பைக்கை வழிமறித்து ரகளை செய்துள்ளனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வழிவிடுமாறு குமரன் அதட்டியபோது, அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது 4 பேரும் குமரனை கத்தியால் சரமாரியாக வெட்டிள்ளனர். தடுக்க முயன்ற நண்பரையும் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். குமரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நண்பர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக, ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 பேர் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கை எலும்பு முறிந்ததாக காசிமேடு போலீசார் கூறுகின்றனர். ஆனால், கைதானவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று குமரனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போலீசாரை கண்டித்து உறவினர்களும் நண்பர்களும் காசிமேடு முக்கிய சாலையில் மறியல் செய்தனர். உண்மையான குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் அவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.