வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திறமையற்ற ஸ்டாலின்... காவல் துறை சிறப்பாக செயல்பட பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கவும்.
விவசாயி வீடுபுகுந்து சம்பவம்: புதிய எஸ்பி சிவபிரசாத்துக்கு அதிர்ச்சி sivaganga farmer dies mob sword
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை முத்து (62). விவசாயி. சில காலமாக குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்தார். நாட்டாகுடியில் உள்ள தனது நிலத்தை பார்த்துவிட்டு வருவதற்காக ஊருக்கு வந்தார். நிலத்தை பார்த்த பிறகு, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். பிற்பகல் 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து விவசாயி சோனைமுத்துவை சரமாரி வெட்டி கொன்றது. அவருடன் அவரது நண்பர் பாண்டி என்பவரும் இருந்தார். அவரையும் மர்ம ஆசாமிகள் சரமாரி வெட்டினர். சோனைமுத்துவை கொன்றபிறகுஇம் கொலையாளிகளுக்கு வெறி அடங்கவில்லை. அவரது தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்றனர். பைக்கில் தப்பிய மர்ம கும்பல், போகும் வழியில் தலையை வீசி விட்டுச் சென்றது. சோனை முத்துவீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நண்பர் பாண்டியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சோனை முத்துவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தலையை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் விவசாயி தலையை போலீஸ் தேடும் வீடியோ மற்றும் போட்டோ சிவகங்கையில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. சோனைமுத்துவின் தலையை துண்டித்து கொடூரமாக கொல்லும் அளவுக்கு என்ன முன்பகை இருந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருபுவனம் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தால் எஸ்பி ஆசிஷ் ராவத் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத் இன்று பகல் 12 மணியளவில்தான் பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்த 3 மணிநேரங்களில் கொடூரமாக விவசாயி கொல்லப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டதும் எஸ்பி சிவ பிரசாத் கடும் அதிர்சசியடைந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, எஸ்பி சிவபிரசாத் தெரிவித்தார். கொலை நடந்த நாட்டாகுடி கிராமத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தண்ணீர் வசதி இல்லை. அதிகாரிகளுக்கு பலஆண்டாக மனுக்கள் அளித்தும், பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் அந்த ஊரை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். விவசாயி சோனைமுத்துவும் அந்த காரணத்தால்தான் மதுரையில் குடியேறினார். தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் நாட்டாகுடியில் வசித்து வருகின்றனர். இதனால், இந்த ஊரில், மக்கள் நடமாட்டம் மிகவம் குறைந்துள்ளது. அதனால் சோனை முத்துவை கொலை செய்து விட்டு மர்ம கும்பல் ஈசியாக தப்பி சென்றுள்ளனர். இதனால் நாட்டாகுடியில் எஞ்சியிருக்கும் மக்களும் பயத்தில் வாழுகின்றனர். ஏற்கனவே அஜித் குமார் கொலை வழக்கு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் விவசாயி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திறமையற்ற ஸ்டாலின்... காவல் துறை சிறப்பாக செயல்பட பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கவும்.