உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள் | Tirupati |sorgavasal token

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள் | Tirupati |sorgavasal token

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 10ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை, அதாவது 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து இருக்கும். இந்த நாட்களில் இலவச தரிசனம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான டோக்கன்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் வழங்கப்பட உள்ளன. டோக்கன்கள் பெற இரவு முதலே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளார்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !