சொன்ன வாக்குறுதியை செய்யாத அமைச்சர் நேரு | K N Nehru | Trichy Rain
திருச்சி துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் 72 குடும்பங்கள் வசிக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இப்போது கனமழையால் பச்சைமலை நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதி முழுக்க சூழ்ந்துள்ளது. Breath வீடுகளுக்கு பக்கத்தில் செவந்தாங்குட்டை உள்ளது. மழைக்காலங்களில் குட்டை நீரும் வீடுகளுக்குள் வருகிறது. 2021ல் இதுபோல வீடுகளை மழைநீர் சூழ்ந்த போது உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டார். இங்குள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்கி பட்டா கொடுக்கிறோம் என கூறி சென்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெருமாள் மலை அடிவார மக்கள் வேதனையுடன் கூறினர்.