சென்னை போலீஸ் அடியில் இளைஞர் உடம்பே சுற்றிய ஷாக்-வீடியோ viral video | chennai police | bike crime
சென்னை எர்ணாவூரை சேர்ந்த பரத் என்ற 23 வயதான இளைஞர், தனது நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அந்த வழியாக சென்ற 2 போலீசார், பரத் வந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லாததை கண்டனர். உடனே பரத்தை நிறுத்தி, இது திருட்டு பைக்கா என்று கேட்டனர். பைக் தனது நண்பனுக்கு சொந்தமானது என்று பரத் சொன்னார். நண்பனிடம் இருந்து வாட்ஸ்அப்பில் ஆவணங்களை வாங்கி போலீசாரிடம் காண்பித்தார். ஆனால் அதை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. பரத் வந்த பைக்கை பறிமுதல் செய்தனர். நண்பனோடு ஸ்டேஷன் வந்து உரிய ஆவணங்களை காட்டி பைக்கை பெற்று செல்லும்படி கூறினர். இதனால் பரத் டென்ஷன் ஆனார். பைக்கை எடுக்க விடாமல் போலீசாரை தடுத்தார். கேள்வி மேல் கேள்வி கேட்டார். ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர், பரத் கன்னத்தில் பளார் என அறைந்தார். போலீஸ் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.