உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நடனம் ஆடிய பெண்ணின் இறுதி நிமிடம் | Woman died | Dance in marriage reception | Singer Velmurugan

நடனம் ஆடிய பெண்ணின் இறுதி நிமிடம் | Woman died | Dance in marriage reception | Singer Velmurugan

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் ஷாப் உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா வயது 45. தம்பதிக்கு 2 மகன்கள். ஒருவர் எம்பிபிஎஸ்சும், இன்னொருவர் பார்மசியும் படிக்கின்றனர். மாமல்லபுரத்தில் நேற்று இரவு நடந்த தனியார் பள்ளி தாளாளரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாடகர் வேல்முருகனின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. மேடையில் பாடிய வேல்முருகன், விருந்தினர்களை உற்சாகப்படுத்த ஆர்வமுள்ளவர்களை மேடைக்கு அழைத்து அவர்களுடன் நடனமாடினார். ஞானம் மனைவி ஜீவாவும் ஆர்வமாக மேடையில் ஏறி வேல்முருகனுடன் நடனம் ஆடினார். 4 ஸ்டெப் மட்டுமே ஆடிய ஜீவா, திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் கண் விழிக்காததால் உடனடியாக ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். மகிழ்ச்சியாக நடனமாடிய பெண் மாரடைப்பால் இறந்த சம்பவம் திருமண நிகழ்ச்சியில் சோகதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி