உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 03-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 03-10-2024 | Short News Round Up | Dinamalar

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: சென்னையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக ஐகோர்ட் நியமித்த குழு தாக்கல் செய்த அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி கோர்ட்டும் கண்டித்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. தான் வைத்ததே சட்டம், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வேன்; என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற அகங்காரத்தோடு ஸ்டாலினின் திமுக அரசு துக்ளக் தர்பார் நடத்துகிறது. இதற்கு தமிழக தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக மீட்டு வர 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தப் படகுகள் மண்டலம் வாரியம் நிறுத்தப்பட்டு, வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலம் 3, 14க்கு படகுகள் அனுப்பி வைக்கும் போட்டோவையும் சென்னை மாநகராட்சி அதன் சோசியல் மீடியா பக்கத்த்தில் வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள்ளாவது மழைநீர் வடிகால் பணிகளை முடித்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால் முன்னெச்சரிக்கையாக படகு வாங்கி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில்,

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி