செய்தி சுருக்கம் | 01 PM | 02-11-2024 | Short News Round Up | Dinamalar
மன்னாா் வளைகுடா அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் நவம்பர் 7-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களிலும், நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மிக முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.