உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 10-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 10-01-2025 | Short News Round Up | Dinamalar

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் 2 சட்டத்திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிமுகம் செய்தார். அதில், பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. ஜாமினில் வெளியே வர முடியாது. குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கூட்டு பலாத்காரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்றவற்றுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். முதல்வர் தாக்கல் செய்த இந்த மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை