உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 26-07-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 26-07-2025 | Short News Round Up | Dinamalar

பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார். இரவு 7.50க்கு தூத்துக்குடி வரும் அவர், ஏர்போர்ட்டின் புதிய முனையத்தை தொடங்கி வைக்கிறார். இது தவிர முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை, மற்றும் ரயில்வே திட்ட பணிகள் உட்பட 4250 கோடி மதிப்பிலான திட்டங்ளை தொங்கி வைக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 550 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் மின் வழித்தட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின் திருச்சிக்கு சென்று அங்கு ஓட்டலில் தங்குகிறார். திருச்சி ஏர்போர்ட்டில் பிரதமர் மோடியை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்திக்கிறார். அவருடன் துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, நந்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோரும் செல்ல உள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக அவர்கள் பேசுவார்கள் எனத்தெரிகிறது. தமாகா தலைவர் ஜிகே வாசனும் மோடியை சந்திப்பார் எனத்தெரிகிறது. மோடியை சந்திப்போர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் இல்லை என கூறப்படுகிறது. நாளை கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடி, முதலாம் ராஜராஜ சோழனை கவுரவிக்கும் வகையில் நாணயம் வெளியிடுகிறார். சோழபுரம் கோயிலில் ஆடி திருவாதிரை விழாவிலும் பங்கேற்றபின், டெல்லிக்கு செல்வார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை