உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 26-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 26-11-2024 | Short News Round Up | Dinamalar

தென்கிழக்கு வங்க கடலில் 2 நாட்களாக நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 340 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 750, சென்னையிலிருந்து 830 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். கடந்த 6 மணி நேரமாக 10 கி மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள் வாங்கி உள்ளது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை