உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 28-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 28-09-2024 | Short News Round Up | Dinamalar

கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனபள்ளி கிராமத்தில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இரவுப்பணி முடித்துவிட்டு இன்று அதிகாலை தொழிலாளர்கள் வெளியே கிளம்பினர். அப்போது அங்குள்ள கெமிக்கல் பிளாண்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வானுயர புகை மூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம், ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்துக்கும் மேல் தீயை அணைக்கும் பணி நீடித்தது. மாவட்ட எஸ்பி தங்கத்துரை ஸ்பாட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையே தொழிற்சாலையில் கெமிக்கல் யூனிட் பற்றி எரிந்ததால், அருகில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் உள்பட 10 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில் கேரளாவை சேர்ந்த ஆஷா என்ற பெண் உள்பட 2 பேருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சரயு, தனியார் ஆஸ்பிடலுக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தொழிற்சாலைக்கும் சென்று ஆய்வு நடத்தினார். தீ விபத்து காரணமாக இன்று தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டது. தொழிற்சாலையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை