உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 23-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 23-05-2025 | Short News Round Up | Dinamalar

பிரதமர் மோடி தலைமையில் டில்லி பாரத் மண்டபத்தில் நாளை நிதி ஆயோக் மூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக சென்னை ஏர்போர்ட்டில் இருந்து விமானத்தில் இன்று காலை 9.30 மணியளவில் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். முந்தைய ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு தேவையான நிதி குறித்து முறையிடப் போவதாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார். அதன்படி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்; கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார். இதற்கிடையே இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் பிரதமரை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை