உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 09-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 09-06-2025 | Short News Round Up | Dinamalar

பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவுறும் நிலையில், மத்திய அரசின் ஆட்சி குறித்து நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது. துாய்மை இந்தியா வாயிலாக கண்ணியத்தை உறுதி செய்துள்ளது. ஜன் தன் எனப்படும் அனைவருக்கும் வங்கி கணக்குகள் திட்டம் வாயிலாக, அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை, பல்வேறு முயற்சிகளால் நம் பெண் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா எனப்படும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பல வீடுகளுக்கு புகை இல்லா சமையலறைகளை கொண்டு வந்தது ஒரு மைல்கல் சாதனை. முத்ரா கடன்கள், லட்சக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோராகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாக தொடரவும் உதவியுள்ளன. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளித்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தையை பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கமாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் உள்ளது. அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி, பலரை ஊக்குவித்து வருகின்றனர் என மோடி கூறியுள்ளார்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை