செய்தி சுருக்கம் | 08 AM | 13-02-2025 | Short News Round Up | Dinamalar
கடந்த 1961ல் வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் அதில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்டத்தின் சிக்கலான பிரிவுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து வருமான வரி நிர்வாக பணியில் ஈடுபடுவோர், வரி செலுத்துவோர் கவலை தெரிவித்தனர். இவற்றை கருத்தில் கொண்டு எளிமை படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. லோக்சபாவில் கடந்த 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். பின்னர் அது பார்லிமென்ட் நிதி நிலைகுழுவிற்கு அனுப்பப்படும்.