இன்றைய காலை முக்கியச் செய்திகள் | தவெகவில் திக் திக் | 8 AM | 13-10-2025
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். இந்த சம்பவத்துக்கு, போலீஸ் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே காரணம் என, எதிர்கட்சிகள் தமிழக அரசு மீது கடும் விமர்சனங்களை வைத்தன. அதேநேரம், போலீஸ் கட்டுப்பாடுகளை விஜய் பின்பற்றாததே நடந்த சம்பவத்துக்கு காரணம் என ஆளும் கட்சித் தரப்பில் கூறினர். இதற்கிடையில், இந்த விவகாரத்தை விசாரித்து வந்த கரூர் போலீசாரின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடைவிதித்தது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். சென்னை ஐகோர்ட் உத்தரவை ஏற்காத த.வெ.க., தரப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு; நடந்த சம்பவத்தை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் என முறையிட்டனர். இந்த விஷயத்தில், சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும், சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவும் முரண்பட்டு இருக்கின்றன. இதில் கோர்ட் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்தனர். தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தவெக தரப்பில் முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளது. திட்டமிடல் சரியில்லாததாலேயே உயிர் இழப்பு சம்பவம் நடந்தது என விஜய் நினைக்கிறார். அடுத்து எப்படி பிரசாரம் மேற்கொள்வது என்பது தொடர்பாக, கட்சியின் மேல் மட்டத் தலைவர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ் ஆகியோருடன் தொடர் ஆலோசனை நடத்தினார். வழக்கம் போலவே சனிக்கிழமை பிரசாரத்தைத் தொடரலாம் என மேல் மட்டத் தலைவர்கள் இருவரும் கருத்து சொன்னதாக தெரிகிறது. அதை ஏற்காத விஜய், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே, அடுத்தகட்ட பிரசாரம் திட்டமிடப்பட வேண்டும். தீர்ப்பு வெளியானதும், அது குறித்து தீவிரமாக ஆலோசிப்போம். பின், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்போம். அதுவரை, எல்லா விஷயங்களு க்கும் இடைவெளி விடுவோம் என சொல்லிவிட, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை திகிலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் த.வெ.க., தலைவர்கள். #SupremeCourtVerdict #VijayParty #TVK #KarurStampede #RallyTragedy #TamilNaduPolitics #ElectionCampaign #CBIProbe #JusticeForVictims