/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 17-02-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 17-02-2025 | Short News Round Up | Dinamalar
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், டில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜ பதவியேற்பு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பிப் 17, 2025