உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 31-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 31-01-2025 | Short News Round Up | Dinamalar

இந்த ஆண்டுக்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரு அவைகளிலும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் இந்த தீர்மானத்துக்கு பிரதமர் மோடி அளிக்கும் பதிலுரையுடன் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பட்ஜெட் தொடரின் முதல் பகுதி நிறைவடைகிறது. பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நடக்கிறது. இன்று தொடங்கும் பட்ஜெட் தொடரில் பல்வேறு புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை