உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 06-08-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 06-08-2025 | Short News Round Up | Dinamalar

திருப்பூர் உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ளது சிக்கனூத்து கிராமம். இங்கு மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான 40 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதில் திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி வயது 60, அவரது மகன் தங்கப்பாண்டியன் வயது 32. ஆகியோர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். மூர்த்தி இங்கு 3 வருடமாக வேலை பார்த்துள்ளார். தங்கப்பாண்டியன் 1 மாதத்துக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த சூழலில் நேற்று மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன், தந்தை மற்றும் அண்ணனை பார்க்க வந்துள்ளார். இரவில் தந்தை மற்றும் 2 மகன்களும் மது குடித்துள்ளனர். நள்ளிரவில் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. மணிகண்டன், தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கி வெட்டி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலை செய்பவர்கள் குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரோந்து பணியில் இருந்த எஸ்எஸ்ஐ சண்முகவேல், ஆயுதப்படை கான்ஸ்டபிள் அழகு தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். தகராறில் ஈடுபட்டவர்களை விலக்க முயன்ற போது 2 மகன்களும் போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியுடன் தாக்க பாய்ந்துள்ளனர். எஸ்எஸ்ஐ சண்முகவேலை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவரது நெற்றி மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீஸ் ஜீப்பின் கண்ணாடிகள் மற்றும் வாக்கி டாக்கியின் வயர்களை சேதப்படுத்தி 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். கொலை நடந்ததும் மணிகண்டன் மற்றும் தங்கபாண்டியனின் மனைவி குழந்தைகள் அவசர அவசரமாக தோட்டத்தை விட்டு வெளியேறி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சமடைந்துள்ளனர். மாவட்ட எஸ்பி கிரிஷ் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைத்து 3 பேரையும் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் மீது திண்டுக்கல்லில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்கு, தங்கபாண்டி மீது 4 வழக்கு, தந்தை மூர்த்தி மீது 2 வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி