உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 07-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 07-06-2025 | Short News Round Up | Dinamalar

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு மதுரை வருகிறார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஒத்தக்கடையில் நடக்கும் பாஜ தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அமித்ஷா வருகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் ஏர்போர்ட் முழுதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோயிலிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். மதுரை மாநகர் முழுதும் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க கலெக்டர் சங்கீதா தடை விதித்துள்ளார். தடையை மீறி ட்ரோன்களை பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜூன் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி