/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 07-11-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 07-11-2024 | Short News Round Up | Dinamalar
அசுரன் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த நாள் கந்த சஷ்டி திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருத்தணி தவிர அனைத்து முருகன் தலங்களிலும் நடத்தப்படுகிறது. சூரனை வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டும் சிறப்புமிக்க சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூரில் கோலாகலமாக நடந்தது.
நவ 07, 2024