தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவட்டிபட்டியில் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி மலர்க்கொத்து கொடுத்து மாரியப்பனை வரவேற்றார். ஊர்மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து, மலர்தூவி வரவேற்றனர். திமுக குடும்ப கட்சிதான்: KKSSRR எங்க அப்பா, நான், என் மகன், ஏன் எங்க குடும்பமே திமுக கட்சி தான். அதனால் திமுக குடும்ப கட்சி தான் என வருவாய் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்வதில் எனக்கு பெருமை தான் என ராமச்சந்திரன் கூறினார்.