/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 14-09-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 14-09-2024 | District News | Dinamalar
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதியில் டான்டீ என அழைக்கப்படும் தமிழக அரசு தேயிலை தொட்ட கழகத்திற்கு சொந்தமான பாண்டியார், சேரம்பாடி சேரங்கோடு, நெல்லியாளம் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தேயிலை தொட்டங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய இயந்திரங்கள் உதவியை டான்டீ நிறுவனம் நாடியது. இதன் ஒரு பகுதியாக டான்டீயில் ஒப்பந்த முறையில் தேயிலை செடிகளை கவாத்து வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பசுந்தேயிலை பறிக்க பெண் தொழிலாளர்களுக்கு மின் பேட்டரியில் இயங்க கூடிய எலக்ட்ரிக் டீ ஹேர் வெஸ்டர் என்ற கையடக்க எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
செப் 14, 2024