மாவட்ட செய்திகள் | 18-01 -2025 | District News | Dinamalar
கிராம மக்கள் வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பு கிராம ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் இரவு சப்பரத்தில் வனத்து அந்தோணியார், பாத்திமா, மாதா தனித்தனி சப்பரங்களில் ஊர்வலம் வந்தனர். பொதுமக்கள் மாலை, பொரி உள்ளிட்ட பொருட்கள் காணிக்கையாக செலுத்தி வழிப்டடனர். காலை முக்கிய நிகழ்வான கரும்பு தொட்டில் கட்டி நேர்த்தி கடன் நடைபெற்றது. நேர்த்தி கடன் செலுத்தி வனத்து அந்தோனியாருக்கு கொடுக்கப்பட்ட கரும்பு உள்ளிட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் கரும்பை பாடத்தான் பட்டியை சேர்ந்த அந்தோனி ரூ 50 ஆயிரத்து 100 க்கும் 3 வது கரும்பை இராஜசேகர் ரூ 26,000 க்கு ஏலம் எடுத்தனர். கரும்பு ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும் அதனால் போட்டி போட்டு ஏலம் எடுத்ததாக கிராமக்கள் தெரிவித்தனர்.