/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 25-08-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 25-08-2024 | Short News Round Up | Dinamalar
கடலூர் நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ், அவரது சகோதரர் ரமேஷ். இருவரும் பட்டாசு விற்பனை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து பட்டாசு வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக லைசென்சும் வைத்துள்ளனர். இந்த ஆண்டும் லைசென்சை புதுப்பித்தனர். ஆனால் இவர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் வைத்து பட்டாசு தயாரிப்பதாக முதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டது தெரியவந்தது. குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் ரமேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆக 25, 2024