மாவட்ட செய்திகள் | 31-08 -2024 | District News | Dinamalar
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். கொல்லப்பள்ளி பகுதியில் வள்ளிமலை ஆதீனம் சிவானந்த வாரியார் சுவாமிகள் குமார மடம் வைத்துள்ளார். நேற்று இரவு ஆதீனம் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு வந்த முகமூடி கும்பல் மடத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பீரோவில் இருந்த 10 சவரன், 5 கிலோ வெள்ளி பூஜை பொருட்களை கொள்ளையடித்து தப்பியது. மடத்தின் மேலாளர் போலீசில் புகார் கூறினார். குடியாத்தம் போலீசார் மடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர்
ஆக 31, 2024