செய்தி சுருக்கம் | 01 PM | 20-09-2024 | Short News Round Up | Dinamalar
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் எந்த அளவு உலக அளவில் பிரபலமோ அதே அளவு அங்கு கிடைக்கும் லட்டு பிரசாதமும் பிரபலம். ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் டிமாண்டை பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதெல்லாம் கூட நடக்கிறது. இந்த சூழ்நிலையில் தான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிர வைக்கும் குற்றச்சாட்டை கிளப்பினார். பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக கூறினார். அடுத்த நாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு தடயங்கள் லட்டில் இருப்பதாக கூறப்பட்டது.