/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்திசுருக்கம் | 08 PM | 15-11-2024 | Short News Round Up | Dinamalar
செய்திசுருக்கம் | 08 PM | 15-11-2024 | Short News Round Up | Dinamalar
பீஹார் மாநிலம் ஜமுய் நகரில் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். 6 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். கூட்டம் முடிந்த பிறகு, இந்திய விமானப்படை சொந்தமான விமானத்தில் பிரதமர் மோடி டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருமணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி தியோகரி ஏர்போர்ட்டில் காத்திருந்தார். டெல்லியில் இருந்து மாற்று விமானம் ஜார்க்கண்ட் வந்ததையடுத்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்.
நவ 15, 2024